கிழக்கு பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்!
Sri Lanka
Maaveerar Naal
Sri lanka Tamil News
By Kanooshiya
கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் இன்று (27.11.2025) மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
அதன்படி, இன்று (27.11.2025) மாலை 6.05 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பொதுச் சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் நினைவுத்தூபிக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்