சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெறும் : ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு

Jaffna Maaveerar Naal
By Theepan Nov 25, 2026 01:05 PM GMT
Report

 சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் சட்டரீதியான தடைகள் மற்றும் காணி உரிமை தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சாட்டியில் சிறப்பாக இடம்பெறும் என தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு முன்பாக அமைந்துள்ள வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திடலில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

காணியால் ஏற்பட்ட சர்ச்சை

சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்கு தனிநபர் ஒருவர் உரிமை கோரியுள்ளதுடன், குறித்த காணியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெறும் : ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு | Maaveerar Remembrance Day In Satti

 இதனையடுத்து காவல்துறையினர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்தனர். இதனால் இம்முறை சாட்டி துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருந்தது.

கடந்த நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நினைவேந்தலைத் தடை செய்வதற்கான உரிய சட்ட ஏற்பாட்டை காவல்துறையினர் தெளிவாக முன்வைக்கவில்லை என்ற ஆட்சேபனை சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

வேலணை பிரதேச சபை

 இந்நிலையில், துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குத் தடைகள் ஏற்படும் பட்சத்தில், மக்களின் நினைவேந்தல் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மாற்று இடமொன்றை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேலணை பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சபை அதற்கான இடமொன்றை வழங்கியிருந்தது.

சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெறும் : ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு | Maaveerar Remembrance Day In Satti

இதனிடையே, நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 குறிப்பாக பொது இடையூறு ஏற்படுத்தப்படக் கூடாது மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்கள் அல்லது அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் நினைவேந்தலை முன்னெடுக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்ததாகவும், காணியின் உரிமை தொடர்பான விவகாரத்தில் தீர்மானம் எதனையும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள்

இதனால் காணி உரிமை தொடர்பான சர்ச்சை ஒருபுறம் தொடர்ந்தாலும், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மறுபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெறும் : ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு | Maaveerar Remembrance Day In Satti

அதனடிப்படையில் ஏற்கனவே கடந்த நவம்பர் 18ஆம் திகதி சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஆரம்பகட்ட ஏற்பாட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குச் சட்டரீதியான அல்லது வேறு தடைகள் ஏற்பட்டாலும், அதற்கு முன்பாக உள்ள வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் பிரத்தியேகமாகத் தயார்படுத்தப்பட்டுள்ள திடலில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

எனவே, இம்முறை சாட்டியில் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடத்தில் இடம்பெற்றாலும், நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018