லண்டனில் மாவீரர் நினைவுக் கண்காட்சி: காட்சிப்படுத்தப்பட்ட அரிய பொருட்கள்
Sri Lankan Tamils
London
By Pavi
பிரித்தானிய தலைநகர் லண்டனில் மாவீரர்களை நினைவுகூரும் வகையில் சிறப்புக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்கள் பயன்படுத்திய ஆவணங்கள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருட்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும் நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் திரைக்காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளதுடன், அவை பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரிய பொருட்கள்
இந்நிலையில், அடுத்த ஆண்டு உலகெங்கிலும் வாழும் மக்களிடமிருந்து மாவீரர்கள் பயன்படுத்திய அரிய பொருட்களைச் சேகரித்து, பிரமாண்டமான கண்காட்சியொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





5ம் ஆண்டு நினைவஞ்சலி