வட அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை (06) ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் (Yukon) பிரதேசத்தின் எல்லையில் உள்ள இப்பிராந்தியத்தில், கடந்த 24 மணி நேரத்திற்குள் பல சிறியளவான தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு மத்தியில் இந்த பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதனால் மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
A magnitude 7.0 earthquake in Alaska coincided with a powerful M8.1 solar flare that occurred today in sunspot region AR4299
— Meteoagent (@meteoagentapp) December 7, 2025
The flare began at 20:31 UTC, and the earthquake occurred at 20:41 UTC. Eight minutes – the time it takes for light to travel from the Sun to Earth.
1)… pic.twitter.com/ocg6G502bM
நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீற்றர் தொலைவிலும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் குறிப்பாக தரைமட்டத்திற்கு மிக அருகில் உணரப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை மையமும், எந்த சுனாமி முன்னெச்சரிக்கையினையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |