மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம்
Vavuniya
Sri Lanka
India
Tamil
By Sathangani
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் (C. Subramania Bharati) 104வது நினைவு தினம் வவுனியாவில் (Vavuniya) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இன்று (11) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இந்த நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டோர்
இதன்போது பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கிருஷ்ணராஜ் லிசாந்தினியால் கவி அஞ்சலியும், ஆசிரியர் கதிர்வண்ணனால் நினைவுகளையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகரசபை பிரதி மேயர், மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




4ம் ஆண்டு நினைவஞ்சலி