மகாவலி அபிவிருத்தியின் பெயரில் நில ஆக்கிரமிப்பு:நிறுத்தக் கோரி போராட்டம்
Sri Lanka Police
Tamils
Sri Lanka
By Laksi
மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய் கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டமானது இன்று(8) வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மகஜர் கையளிப்பு
போராட்டத்தில் 'தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காதே', 'மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து', 'எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே', 'மகாவலி அபிவிருத்தி முல்லைத்தீவில் பௌத்த மயமாக்கலுக்கா' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்