விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய மகிந்த
உர பற்றாக்குறையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து தாம் மிகவும் வருந்துவதாகவும், உரங்களை வழங்க முடியாமல் உள்ளமைக்கு விவசாயிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
"விவசாய சமுகத்தின் நிலைமை குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். விவசாய சமுகத்தை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபராக, இந்த உர பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் இந்த பருவத்தில் சிலருக்கு நாங்கள் அதை செய்ய முடியவில்லை. அடுத்த பெரும்போக பருவத்திலிருந்து இந்த பணியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான முதன்மை நோக்கம் ஜனாதிபதிக்கு இருந்தது.
அதன்படி, பெரும்போகபருவத்திற்கு போதுமான உரங்கள் இருப்பதாக அந்த நேரத்தில் வேளாண்மைத் துறையும் அமைச்சும் எங்களுக்குத் தெரிவித்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை எந்தப் பகுதிக்கும் கொடுக்க முடியவில்லை. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
இது குறித்து நாங்கள் மூன்று முறை அமைச்சரவையில் பேசினோம். எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுக்க முடியாத ஒரு குழு இன்னும் உள்ளது. நான் வருந்துகிறேன், ”என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 27 ஆம் திகதி அம்பலான்தோட்டவில் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.