மகிந்தவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யாழ் இளைஞர்கள்: அமைச்சர் வெளியிட்ட காணொளி
Sri Lankan Tamils
Jaffna
Mahinda Rajapaksa
Sri Lanka
By Dhilak
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் சிலர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தினை கேக் வெட்டி கொண்டாடியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினமானது நேற்று முன்தினம் தென்னிலங்கையின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
அதேவேளை, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அவரது தீவிர விசுவாசிகள் என்று மகிந்தவின் பிறந்ததினத்திற்காக பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
காணொளிகள்
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் சிலர் மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தினை வெகு விமர்சையாக கேக் கொண்டாடியுள்ளதாக காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான காணொளிகளை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்