பதவி விலகுகிறாரா மஹிந்த? உண்மையை பகிரங்கப்படுத்திய தேரர்!
பிரதமர் மஹி்ந்த ராஜபக்ச பதவி விலகப்போவதில்லை என்று நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் மஹிந்த ராஜபக்ச குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தால், அவர் முதன்முதலாக தமது அமைப்பிடமே தெரிவித்திருப்பார் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பி்ன் போது, அபேயராம விஹாராதிபதியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் இன்று சிறு சிறு பிரச்சினைகள் உள்ளபோதும், தமக்காக மக்கள் சேவைக்காக அழைத்து வந்த சகோதரரான கோட்டாபய ராஜபக்சவை கைவிட்டுவிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச செல்லமாட்டார் என்பது தமது நம்பிக்கை என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தால், அல்லது சூழ்ச்சியின் அடிப்படையில் அவர் பதவி விலகவேண்டியேற்பட்டால், அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று தாம் கோருவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டை முன்னோக்கி நடத்திச்செல்ல கோட்டாபய ராஜபக்சவுக்கு நோக்கம் உள்ளபோதும் அவரின் அருகில் உள்ளவர்களே அவருக்கு தடையாக இருப்பதாக தேரர் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை மற்றுமொரு ராஜபக்ச, பிரதமராக வருவார் என்ற செய்தி தொடர்பாக தாம் எந்த கருத்தையும் வெளியிடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்