இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட மகிந்த : வெட்கப்படும் சாகர
போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், நாட்டை அபிவிருத்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருப்பதை இட்டு குடிமக்களாகிய நாம் வெட்கப்படுகிறோம், வருந்துகிறோம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் தெரிவித்தார்.
மகிந்தவுக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், கட்டளையிடப்படும் இடத்திற்குச் செல்லத் தயாராக இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உகண்டாவிலும் துபாயிலும் மகிந்தவின் பணம்
கொழும்பில் இன்று(11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாகர கரியவசம் இவ்வாறு கூறினார்.

மேலும், மகிந்தவின் பணம் உகண்டாவிலும் துபாயிலும் இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் ஆரம்பத்தில் கூறியபோதிலும், தற்போது அத்தகைய பணம் எதுவும் இல்லை என்று கூறத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் சொத்துகள் மற்றும் பணம் தொடர்பான விசாரணைகள் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்