மகிந்த தலைமையில் எடுக்கப்படவுள்ள இறுதித்தீர்மானம்
srilanka
mahinda
election
By Vasanth
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக பிளவுபட்ட கருத்து இருப்பதால் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.
இதனிடையே அரசாங்கத்தை ஆதரிக்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பௌத்த பிக்குகள் மாகாண சபை அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்