பெரும்பான்மை இல்லை என்றால் நானாகவே பதவியை துறப்பேன்! மகிந்தவின் பகிரங்க அறிவித்தல்

Galle Face Protest Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By S P Thas Apr 27, 2022 04:44 AM GMT
Report

பெரும்பான்மை ஆதரவு தனக்கு இல்லாவிட்டால் தானாகவே பதவிலியிருந்து விலகுவதாக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

"நாடாளுமன்றப் பெரும்பான்மை எனக்கு இருக்கும் வரை என்னை யாரும் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முடியாது. நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தும் மக்களின் குரலிலே அவர்களது கோரிக்கை எனக்குக் கேட்கின்றது. அவை பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள்.


ஒவ்வொரு அரசு வரும்போதும் மக்கள் போராட்டங்கள் நடக்கும். மக்கள் போராட்டங்களுக்காக அரசுகள் விலகுவது என்றால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது

ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழமை. அவற்றின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. ஆனால், அதற்காக ஜனநாயக விரோத முறையில் அரசுகளைக் கலைக்க வேண்டும் என்பதல்ல. 2015 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்னரேயே, உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு விட்டேன்.

ஜனநாயகத்துக்கு முரணான வகையில் பதவியைப் பிடித்து வைத்திருக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. ஆனால், இப்போது ஜனநாயக ரீதியில் பெரும்பான்மை என் பக்கம்தான் உள்ளது. ஆகவே, நான் பிரதமராகப் பதவியில் நீடிப்பேன். அது மக்கள் தீர்ப்பு. சம்பந்தப்பட்டோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் எங்களோடு பேசலாம். பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகின்றேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026