மகிந்தவின் கால்டன் இல்லத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் ஜனாதிபதி மக்நித ராஜபக்ச தனது 80 ஆவது பிறந்தநாளை நேற்றையதினம்(16) கால்டன் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.
அவரது பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி நேற்றையதினம் கால்டன் இல்லத்தில் அவருக்கு ஆசி வேண்டி பௌத்த மத வழிபாடுகளும் இடம்பெற்றன.அத்துடன் பிக்குகளுக்கான அன்னதான நிகழ்வையும் மகிந்த ராஜபக்ச நடத்தியுள்ளார்.
பலர் பங்கேற்பு
இந்த நிகழ்வில் மகிந்தவின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் நிமால் சிறி பால டி சில்வா உட்பட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மகிந்த ராஜபக்சவுக்கு நாளையதினம் 80 வயது பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் அவர், அவரது மகன் நாமல் ராஜபக்ச உட்பட்டோர் அரச பணத்தை எவ்வாறு முறைகேடாக பயன்படுத்தினார்கள் என்ற விடயம் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்