இலங்கை தொடர்பில் அமெரிக்காவில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு
உலக உணவுத் திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளருடன் சந்திப்பு
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்கவுக்கும் உலக உணவுத் திட்டத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் பீஸ்லிக்கும் இடையிலான சந்திப்பு வோஷிங்டனில் இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், டேவிட் பீஸ்லியின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் தூதுவர் மஹிந்த சமரசிங்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லிக்கு அறிவித்தார்.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் சிக்கல்
அத்துடன், இலங்கையில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் மஹிந்த சமரசிங்க வலியுறுத்தினார்.
அதன்போது, அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்த டேவிட் பீஸ்லி, தனது இலங்கை விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.