பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய இலங்கைப் பிரதமர்!
பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தேசிய தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷிற்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, இன்று வெள்ளிக்கிழமை காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று காலை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் வரவேற்பில் கலந்துக் கொண்ட பங்களாதேஷ் நாட்டு உயர்மட்டதலைவர்களை அந்நாட்டு பிரதமர் செய்க் ஹசீனா பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலங்கையின் உயர்மட்ட குழுவினரை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அந்நாட்டு பிரதமருக்கும், ஏனைய தலைவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
பங்களாதேஷ் நாட்டின் 50 ஆவது சுதந்திர நிகழ்வு மற்றும் பங்களாதேஷ் நாட்டின் தேசப்பிதாவாக கருதப்படும்.
பங்கபந்து செய்க் முஜ்புர் ரஹ்மானின் 100ஆவது பிறந்த தின நிகழ்விலும் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர வீரர்களின் நினைவிடங்களுக்கு சென்று அவர்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர் நினைவிட வாளாகத்தில் ஞாபகார்த்த மரக்கன்றினை நாட்டினார் பின்னர்.
வெளிநாட்டு தலைவர்களின் வருகையினை நினைவுப்படுத்தும் புத்தகத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.