மகிந்தவின் அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு
கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
"கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் கட்டாய தகனத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமரின் அறிவிப்பு குறித்த ஊடக அறிக்கையை வரவேற்கிறோம். சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் திருத்தப்பட்ட நடைமுறையை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எம்பி எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மகிந்த, கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எதிர்காலத்தில் புதைக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.