கோட்டாபய மறைமுகமாக விமர்சிப்பது மகிந்தவையா? ஹரின் கேள்வி
அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்தினாரா அல்லது பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீது குற்றம் சுமத்தினாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் பிரதானிகள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரச தலைவர் அண்மையில ஆற்றிய உரையில் குற்றம் சுமத்தி இருந்தார். அரச தலைவர் தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது, ஏழு முதல் எட்டுப் பேரை மாத்திரம் அழைத்துச் செல்வதாக கூறுகிறார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அண்மையில் இத்தாலிக்கு சென்ற போது தன்னுடன் சுமார் 50 பேர் கொண்ட குழுவை அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகசவ்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின தொகுப்பு,