வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
tourist
pcr test
omicron
By Sumithiran
தற்போது உலகை அச்சுறுத்திவரும் புதிய கொரோனா பிறழ்வான ஒமிக்ரோன் பல நாடுகளில் பரவலாக காணப்படுவதால் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பிசிஆர் சோதனையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை மருத்துவ சபை முன்மொழிந்துள்ளது.
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் மருத்துவர் பத்மா குணரத்ன (Padma Gunaratne)இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் தவிர அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கமைய, கொவிட்-19 தொடர்பான விசேட நிபுணர் குழு, பிசிஆர் சோதனையின் முக்கியத்துவம் கருதி,
அதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் முன்மொழிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்