ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி

Maithripala Sirisena Galagoda Aththe Gnanasara Thero Prageeth Eknaligoda
By Jaso Oct 19, 2026 10:14 AM GMT
Report

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டபோது, ​​ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே அவர் மீண்டும் சிறை செல்லக் காரணமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதுடன் அதற்காக பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 இன்று( 19) அவர் வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத் தீர்ப்பின் நகலை ஆய்வு செய்ததில், ஜனாதிபதி செயலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த தொழில்நுட்பக் குறைபாடே நீதிமன்றத்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஞானசார தேரருக்கு எதிராக B 7417/10 மற்றும் 40042 ஆகிய இரு வழக்குகள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி | Maithri Apologizes Gnanasara Pardon

ஜனாதிபதி செயலகத்தில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளர், இந்த பொதுமன்னிப்பு தொடர்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

எனினும், தேவையான ஆவணங்கள் அமைச்சிற்கு அனுப்பப்படவில்லை என்றும், உரிய அனுமதியைப் பெறாமலேயே தனது கையொப்பம் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஞானசாரரை விடுதலை செய்தால் இலங்கையில் இனவாதம் தலைதூக்கும் : தமிழ் எம்.பி பகிரங்கம்

ஞானசாரரை விடுதலை செய்தால் இலங்கையில் இனவாதம் தலைதூக்கும் : தமிழ் எம்.பி பகிரங்கம்

மீண்டும் சிறை செல்ல காரணமான ஞானசாரதேரர்

“இது என்னை தவறாக வழிநடத்திய செயலாகும்” என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி | Maithri Apologizes Gnanasara Pardon

தனது ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் செய்த இந்தத் தவறுதான், சந்தியா எக்னலிகொடவின் முறைப்பாட்டின் பேரில் (பாக்கியசோதி சரவணமுத்துவுடன் தொடர்புடைய அமைப்பின் பங்களிப்புடன்) முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்லக் காரணமானது என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், அந்தத் தீர்ப்பு சரியானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது - அநுர அரசை எச்சரிக்கும் தேரர்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது - அநுர அரசை எச்சரிக்கும் தேரர்

பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு

தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளால் இந்தத் தவறு இழைக்கப்பட்டிருந்தாலும், இதற்காக பௌத்த பிக்குகளிடம் அவர் மன்னிப்பு கோரினார்.

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி | Maithri Apologizes Gnanasara Pardon

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் விளக்கம் கோரியதைத் தொடர்ந்தே தான் இந்த அறிக்கையை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். 

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026