மைத்திரி தீட்டிய சதியே அனைத்திற்கும் காரணம் - பகிரங்க குற்றச்சாட்டு
ஒருபுறம் பொருளாதார பிரச்சினை, மறுபுறம் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட தற்போதைய மலையளவிலான பிரச்சினைகளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தீட்டிய அரசியலமைப்புச் சதியே பிரதான காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 52 நாள் நெருக்கடியால் நாடு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முடிந்தால் ஊடகங்களுக்கு முன் வந்து அதனைக் கூறுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(Sajith Premadasa) பாலித ரங்கே பண்டார சவால் விடுத்துள்ளார்.
“எங்களது பிரதித் தலைவர் சஜித்தை பிரதமராக்க உதவுங்கள் என்று ஜனாதிபதி சிறிசேன எங்களிடம் பலமுறை கூறியிருக்கிறார்.அத்தகைய ‘அண்டர்கிரவுண்ட்’ விளையாட்டில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது.
மழையில் நனைந்து அப்பாவி விவசாயிகளை ஏமாற்றாமல் முடிந்தால் எனது சவாலை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை கேட்டுக்கொள்கிறேன். சஜித்தால் அரசாங்கத்திற்கு எதிராகவும், சிறிசேனவிற்கு எதிராகவும் பேச முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.