மைத்திரி தரப்புக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
srilanka
johnston fernando
maithripala sirisena
By Vasanth
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்த வெவ்வேறு கருத்துக்கள் பயனற்றவை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் (26) அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டவேளை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்த அரசாங்கத்தின் பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளிப்படுத்திய கருத்தை பற்றி ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.