மைத்திரிக்கு விடாத பதவி ஆசை - நிறைவேற்றப்பட்டது யோசனை
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Election
By Sumithiran
மீண்டும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் செயற்குழுக் கூட்டம் இன்று (11) காலை டர்லி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டம்

கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் செயற்குழு கூட்டம் இடம்பெற்றதுடன், இதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் இதில் கலந்து கொண்டிருந்த நிலையில், குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி