யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து குறித்து சத்தியமூர்த்தியின் அறிவிப்பு

Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital Fire Accident
By Theepan May 09, 2026 05:02 AM GMT
Report

பொது மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வழக்கம் போல் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் (09-05-2026) சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! அதிகாலையிலேயே பரபரப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! அதிகாலையிலேயே பரபரப்பு

வைத்தியசாலை ஊழியர்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வைத்தியசாலை ஊழியர்கள், மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீ பரவிய போதிலும், ஒரு தொகுதி மருந்துகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து குறித்து சத்தியமூர்த்தியின் அறிவிப்பு | Major Fire At Jaffna Teaching Hospital Pharmacy

தற்போது சேதமடைந்த மருந்துகளின் விபரங்கள் மற்றும் அதன் பெறுமதி குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தினால் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.

உள்நாட்டு மருந்து களஞ்சியம் மற்றும் கிளினிக் பகுதிகளில் உள்ள மருந்தகங்கள் பாதிக்கப்படாததால் வழக்கம் போல் மருந்து விநியோகம் தொடரும்.

ஈரானுக்கு ஆயுத உதவி! அமெரிக்கா விதித்துள்ள அதிரடித் தடை

ஈரானுக்கு ஆயுத உதவி! அமெரிக்கா விதித்துள்ள அதிரடித் தடை

மின் கசிவு

தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மத்திய சுகாதார அமைச்சு மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஊடாக மேலதிக மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து குறித்து சத்தியமூர்த்தியின் அறிவிப்பு | Major Fire At Jaffna Teaching Hospital Pharmacy

மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொது மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வழக்கம் போல் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

சிகிச்சைகளோ அல்லது மருந்து விநியோகமோ தடைபடாது என்பதை உறுதிப்படுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கபில சந்திரசேனவின் பிரேதப் பரிசோதனை...! கோட்டை நீதவானின் அதிரடி உத்தரவு

கபில சந்திரசேனவின் பிரேதப் பரிசோதனை...! கோட்டை நீதவானின் அதிரடி உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025