நாளை வேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய அரச நிறுவனம்?
srilanka
train
strike
By Jaso
ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் இடம்பெற்ற மோசடிகள் உட்பட தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை எனவும் எனவே ரயில் வேலைநிறுத்தம் நாளை (30) தொடங்கப்படும் என்று ரயில் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் இந்திக தொடங்கொட நேற்று (28) தெரிவித்தார்.
ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பட 34 தொழிற்சங்கங்களின் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் நாளை மட்டுமல்ல, அடுத்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.
அதன்படி, வாரத்தில் பல நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி