யாழ்ப்பாண மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! (காணொளி)
corona
Jaffna
peoples
Srilainka
Jaffna JA
By MKkamshan
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக இது வரையில் யாழ்ப்பாணத்தில் 300 குடும்பங்களை சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (kanapathipillai Makesan) தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சீரற்ற காலநிலை தொடரும் எனவும் வீடுகளிலுள்ள சிறுபிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கொரோனா தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த முழுமையான விடயம் காணொளியில்,