P2P போராட்டம் - ரவிகரனிடம் மல்லாவி பொலிஸார் வாக்குமூலம்
srilanka
police
investigation
mallavi
By Vasanth
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிம் மல்லாவி பொலிஸார் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில் நேற்று மல்லாவி பொலிஸார் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் முல்லைத்தீவில் இன்னும் பொலிஸார் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.