பாடசாலை மாணவிகளுக்கு தவறான காணொளிகளை காட்டிய தந்தை அதிரடி கைது!
பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச காணொளிகளை காட்டிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காட்டியதாக நானுஓயா காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகளால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முறைப்பாடுகளை பதிவு செய்த சிறுமிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
அத்தோடு, கைது செய்யப்பட்டுள்ள நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளில் தந்தையான சந்தேக நபர் இன்று (21) நுவரெலியா மாவட்ட நீதிபதி முன் முற்படுத்தப்பட உள்ளார்.

மேலும், நானுஓயா காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து நானுஓயா காவல் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |