கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட் பொதியுடன் கைதான நபர்!
சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மினுவாங்கொட, திவுலபிட்டியவைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.
சிகரெட் பொதியுடன் ஒருவர் கைது
இது குறித்து மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு நபரை இலங்கையின் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு கைது செய்தனர்.

குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த நபர் எடுத்துச் சென்ற இரண்டு பயணப் பைகளில் இருந்து, இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 40,000 'டாப் கன்' சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |