கொழும்பில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Sri Lanka Police
Missing Persons
Colombo
By Thulsi
கொழும்பு (colombo) - மட்டக்குளி பகுதியில் வயோதிபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
72 வயதுடைய ஆண்டி மாணிக்கம் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் வேண்டுகோள்
குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் (11) காலை மட்டக்குளி (Mattakkuliya) - அலிவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் காணாமல் போன தினத்தில் நீல நிற கட்டமிட்ட சட்டை மற்றும் சாரம் அணிந்திருந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ இவரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 076-1393975 அல்லது 077-3688870 க்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்