மட்டக்களப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது 10 வருட கடூழிய சிறை
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த 26ம் திகதி தீர்ப்பளித்தார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் 21 ம் திகதி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் மாமா முறையான நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்
10 வருட கடூழிய சிறைத்தண்டனை
இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபர் ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் குற்றவாளியாக கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |