தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்
தனது தனிப்பட்ட கோரிக்கையொன்றை முன்வைத்து, திரப்பனை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு சமிக்ஞைக் கோபுரத்தில் ஏறி நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், குறித்த நபர் தொடர்ந்து கோபுரத்தின் மீது தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட பிரச்சினையொன்றை அடிப்படையாகக் கொண்டே அவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திரப்பனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வித பாதிப்பும் இல்லை
குறித்த நபரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதற்குப் காவல் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் பலமுறை முயற்சித்த போதிலும், அவர் அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |