நாட்டுக்கு பிரச்சனையாக அமைந்த அடிப்படை காரணி எது? முன்னாள் அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஸ்ரீலங்காவில் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையான விடயமாக அமைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டுக்கு பிரச்சினையாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பின் ஊடாக கொண்டுவரப்பட்ட, நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை ஸ்ரீலங்காவில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளதாக மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக நாடாக ஸ்ரீலங்கா இருக்கவேண்டுமானால், முதலில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமெ அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தான் தெரிவாகி 6 மாத காலத்திற்குள் எந்தப்பதவிக்காகப் போட்டியிடுகின்றாரோ அந்தப் பதவியை ஒழிப்பதாக வாக்குறுதியளிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படாத பல விசேட நிபுணர்குழுவின் அறிக்கைகளின் ஊடாகவே நரகத்தை நோக்கிய ஸ்ரீலங்காவின் பாதை கட்டமைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியான ஏற்புடைமையே அவசியமாகும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
The executive Presidential system is the fountain of most evils in this country since it was established in 1978. It must go, if we are to be a modern democracy based on the rule of law.
— Mangala Samaraweera (@MangalaLK) June 24, 2021