அரசியல் கைதிகளின் விடுதலைகோரி மன்னாரில் உறவுகள்!
srilanka
northern provinc
manna
By Vasanth
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியே விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் தரவன் கோட்டை சிறி முத்துமாரியம்மன் ஆலயம், தோட்டவெளி, பறப்பான்கண்டல், இசங்கன்குளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களிலும் நேற்று வியாழக்கிழமை மாலை 6.15 மணியளவில் விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது அரசியல் கைதிகளின் உறவுகள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி