மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா
மன்னாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முப்பதாம் திகதி புத்தளத்தில் இருந்து மன்னார் வருகை தந்து எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கே இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொழும்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக பொலிஸ்மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகதகர்களினால் எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை இன்று கிடைக்கப்பெற்ற நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்த குடும்பத்தினரை பாதுகாப்பான முறையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி கொழும்பில் தொற்று உடையவராக இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
எனினும் தனிமைப்படுத்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் சமுகத்தில் நடமாடிய இடங்கள், தொடர்பு கொண்டவர்கள் தொடர்பில் தற்பொழுது ஆய்வு செய்யப்படுகின்றது. அது முடிவடையும் வரை எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.