மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம் காவல்துறை அசமந்தமா... மக்கள் கேள்வி?
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக பட்ட பகலில் இருவருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் காவல்துறையினர் மீதும் சட்டத்தின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் இடம் பெற்ற 2வது துப்பாக்கிசூட்டு சம்பவம் இது என்பதுடன் 4 நபர்கள் குறித்த இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை 8.30 - 9.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்கு வருகை தந்த நாள்வர் மீது மோட்டார் சைகிளில் வருகை தந்த இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரஜோகம் மேற்கொண்டது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நாள்வரில் இருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பட்ட பகலில் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தடுக்க முடியாத காவல்துறையினர் குற்றவாளிகளையும் கைது செய்ய முடியாமல் போனமை தொடர்பில் மக்கள் காவல்துறையினர் மீது அதிர்ப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு இடம் பெற்ற இடத்தில் ஒரு பகுதியில் நீதிமன்ற வளாகமும் அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் கடமையில் இருந்த நிலையில் மறுபக்கம் மன்னார் மாவட்ட போக்குவரத்துகாவல்துறையினரின் அலுவலகம் காணப்பட்ட நிலையில் சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் காணப்பட்ட நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் சந்தேக நபர்களும் தப்பி சென்றுள்ளமை மன்னார் மாவட்ட காவல்துறையின் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு கடமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகவே குறித்த சம்பவத்தில் உயிரிந்த நபர் மீது கடந்த வருடம் காவல்துறை சீருடைக்கு ஒத்த சீருடையுடன் வருகை தந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.
அதே நேரம் சம்பவத்தின் பின்னனியில் உள்ள வழக்கு ஒன்றுடன் தொடர்புபட்ட இரு நபர்கள் முன்னதாகவே அடம்பன் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒரு வருடம் கடந்த நிலையிலும் குறித்த கொலை தொடர்பிலோ கொலை முயற்சி தொடர்பிலோ காவல்துறையினர் எந்த வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் நீதி மன்றத்துக்கு முன்பாகவே இடம் பெற்ற குறித்த கொலை சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளதுடன் காவல்துறை மீதும் அவர்களின் விசாரணை நடவடிக்கைகள் மீதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னைய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்மற்றும் கொலை சம்பவங்கள் போன்று சம்பவத்தின் பின்னர் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அப்பகுதியில் உள்ள CCTV கமராக்களையும் சோதித்து வருகின்றனர்
இருப்பினும் இதுவரை குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |