மடுமாதா திருவிழாவில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க!
Mannar
By Kathirpriya
மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகிதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.
இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறாயன் ஊடக்கே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து இந்த திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கின்றனர்.
திருச்சொரூப பவனி
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.
மடு திருவிழா திருப்பலியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்
இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி