மனோகணேசன், ரிசாத் பதியுதீன், டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு
மனோ, ரிசாத் ஆதரவு
இன்று நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டு அரசாங்கமாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்த டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைத்துவ சபை நேற்று பிற்பகல் நுகேகொடையில் உள்ள கட்சி செயலகத்தில் கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அனைத்து வேட்பாளர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ரிஷாத் பதுயுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் அதிபர் வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
பதுயுதீன் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.