மைத்திரியை திடீரென சந்தித்த மனோ கணேசன்
Maithripala Sirisena
Mano Ganesan
SriLanka
By Chanakyan
முன்னாள் சிறிலங்கா அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் (Maithripala Sirisena) தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் (Mano Ganesan) இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பானது நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் முறை சம்மந்தமாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்த விடயங்களும் பேசவில்லையெனவும், தேர்தல் முறைமை தொடர்பிலும், அதன் மாற்றங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.