3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - பலர் படுகாயம்
எல்லேபொல பிரதேசத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (11) காலை கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெல்மடுல்லவிலிருந்து பலாங்கொடை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 மணி நேரம் முன்