சர்வதேச நீர்வழிகளைப் பிணையாக வைக்க முடியாது: ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
சர்வதேச நீர்வழிகளைப் பிணையாக வைத்து அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் வாஷிங்டன் சகித்துக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாக ஈரான் தெரிவித்து வருவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்து அனுமதி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரானுடன் ஒருங்கிணைந்து அனுமதி பெற்று அவர்களுக்குப் பணமும் செலுத்தினால் மட்டுமே அந்தப் பாதை திறந்திருக்கும் இல்லையெனில் தாக்குதல் நடத்துவோம் என்பதாக இருந்தால் அதை ஒருபோதும் நீரிணை திறப்பு என்று சொல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவை சர்வதேச நீர்வழிகள் என்பதை வலியுறுத்திய அவர், அதனை யார் பயன்படுத்த வேண்டும் அல்லது எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை ஈரானியர்களே தீர்மானிக்கும் ஒரு முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரானின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த குறுகிய நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
ஈரான் இந்தப் பாதையை மூடியுள்ளதால் உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பெருமளவு குறைந்து அதன் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 11 மணி நேரம் முன்