நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் தள்ளி போகின்றதா - இதோ 48 நாட்களில் தீர்வு..!

Wedding Astrology
By Beulah Aug 06, 2023 06:04 AM GMT
Report

இன்றைக்கு திருமணம் என்பது எத்தனையோ வரன்கள் பார்த்தும் பலருக்கும் கைகூடா ஒன்றாகவே காணப்படுகின்றது.

இவர்களுக்கு, காரணம் என்னவென்று தெரியாமலேயே திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும்.

இதனால் தீராத மனஉளைச்சல், கவலை ஆகியவை ஏற்படும். எத்தனையோ பரிகாரம், பூஜை எல்லாம் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்பவர்கள் எந்த மாதிரி பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். ​

திருமண தடைக்கு காரணம்

நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் தள்ளி போகின்றதா - இதோ 48 நாட்களில் தீர்வு..! | Marriage Relationship Remedial Pariharam 48 Days

சிலருக்கு பல காலமாக வரன் தேடி அலைந்தும், கோவில் கோவிலாக சென்று வழிபட்டும், ஜோதிடர்கள் சொன்ன பரிகாரம் அனைத்தையும் செய்தும் வரன் அமையாமல் திருமண தள்ளிப் போவதுண்டு.

இப்படி திருமண தள்ளி போவதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியாக இல்லை என்றால் திருமணத்தில் தாமதம், பிரச்சனை ஏற்படும்.

களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு ஏழாவது இடத்தை குறிக்கும்.

இது திருமணம், கணவன் அல்லது மனைவியை குறிப்பதாகும்.

மிக முக்கியமான வீடான இந்த ஏழாம் வீடானது பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை களத்திர தோஷம் என்பார்கள்.

இப்படி களத்திர தோஷம் உள்ளிட்ட எந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் திருமணம் தள்ளி போகிறது என்றால் இந்த 48 நாள் பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உடனடியாக பலன் தரும்.

 திருமண தடை நீங்க பரிகாரம் 

நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் தள்ளி போகின்றதா - இதோ 48 நாட்களில் தீர்வு..! | Marriage Relationship Remedial Pariharam 48 Days

திருமணம் தள்ளி போகிறது என்கிறவர்கள் 48 நாட்களுக்கு தினமும் ஒரு வாழைப்பூ வாங்கி, அதில் உள்ள பூக்களை தனித்தனியாக உதிர்த்த, அவற்றை கொண்ட மாலையாக கோர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாலையை எடுத்துச் சென்று அருகில் பத்திரகாளி அம்மன், பிரத்யங்கரா தேவி அல்லது வாராஹி அம்மன் கோவில் எது இருந்தாலும் அங்கு சென்று விரைவில் திருமணமாக வேண்டும் என உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து, அம்மனுக்கு மாலையை சாற்ற வேண்டும்.

இவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல் 48 நாட்கள் சாற்ற வேண்டும். ​

வாழைப்பூ பரிகாரம்

நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் தள்ளி போகின்றதா - இதோ 48 நாட்களில் தீர்வு..! | Marriage Relationship Remedial Pariharam 48 Days

48 வது நாள் 9 கலசங்கள் எடுத்துக் கொண்டு அவற்றில் நவதானியங்களை போட்டு, அவற்றின் மீது பச்சரிசியை போட வேண்டும்.

அதற்கு மேல் 9 வாழைப்பூக்களை வாங்கி 9 கலசங்களின் மீதும் வைக்க வேண்டும்.

கோவிலில் உள்ள அல்லது ஏதாவது சாஸ்திரம் தெரிந்த புரோகிதரை வைத்து கணபதி ஹோமம் அல்லது வள்ளி-தெய்வசேனா சமேதா சுப்ரமணிய ஹோமம் இவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.

பூஜைகள் அனைத்தும் செய்து முடித்த பிறகு, 9 கலசங்களில் உள்ள வாழை பூக்களில் உள்ள பூக்களையும் உதிர்த்து 9 மாலைகளாக கோர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாலைகளை எடுத்துச் சென்று, அதே அம்மன் கோவிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து, அம்மனுக்கு சாற்ற வேண்டும்.

எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்

நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் தள்ளி போகின்றதா - இதோ 48 நாட்களில் தீர்வு..! | Marriage Relationship Remedial Pariharam 48 Days

அதன் பிறகு திருச்சி, சமயபுரம் அருகில் அமைந்துள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை சென்று பணம் செலுத்தி, திருமண பரிகார பூஜை செய்து விட்டு வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

திருப்பைஞ்ஞீலி கோவிலின் தலவிருட்சமாக வாழை மரம் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள கல்வாழையில் விளையும் பழம் இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும்.

இது சாமானிய மனிதர்கள் உண்ணக் கூடாது. ​

வாழை துளிர்க்காத ஒரே தலம்

நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் தள்ளி போகின்றதா - இதோ 48 நாட்களில் தீர்வு..! | Marriage Relationship Remedial Pariharam 48 Days

மற்ற ஊர்களில் வாழை மரத்தை வெட்டினால் அது மீண்டும் துளிர் விட்டு வளரும்.

ஒரு வாழை கன்றினை வைத்தால் அதிலிருந்து பல கன்றுகள் வரத் துவங்கி விடும்.

இதனால் தான் பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட வாழை உதாரணம் காட்டி வாழையடி வாழையாக என சொல்வார்கள்.

ஆனால் திருப்பைஞ்ஞீலி தலத்தில் வாழையை வெட்டினால் மீண்டும் துளிர் விடாது.

இந்த அதிசயம் இந்த தலத்தில் மட்டுமே நடக்கிறது.

அதனால் தான் திருமண தடை உள்ளவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025