மருதங்கேணியில் 11 ஹெக்டேர் காணி நிலஅளவை: பொது அறிவிப்பு வெளியீடு
மருதங்கேணி பகுதியில் 11.2657 ஹெக்டயர் காணியை காணி சுவீகரிப்பு சட்டத்தின் ஐந்தாம் பிரிவின் கீழ் நிலஅளவை செய்ய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நில அளவை திணைக்களம் குறித்த பொது அறிவித்தவை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள மேலதிக அறிவிப்பில், “பிரதேசசெயலாளரின் 21-05-2026 திகதியிடப்பட்ட நில அளவை கோரிக்கை இலக்கம் VE/SR/2026/27 இற்கும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரின் வர்த்தகமாணி குறிப்பு இல. 4-3/4/2012/D/351 இற்கும் அமைவாக மருதங்கேணி (ஜே/428) கிராம அலுவலர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தேவதுரவு என்று அழைக்கப்படும் 11.2657 ஹெக்டயர் விஸ்தீரணம் உடைய காணியினை ஒரு பகிரங்கத் தேவைக்கு வேண்டியதாய் இருப்பதால் சுவட்டு வரைபடம் Ya/VDE/2016/36 இற்கு அமைவாக காணிசுவீகரிப்பு பிரிவு 5 அடிப்படையில் 2026-07-09 இருந்து தொடர்ந்து தினமும் (வேலைநாட்களில்) காலை 9 மணியில் இருந்து மாலை வரை நிலஅளவை செய்யப்படும் என்பதை அறியத்தருகிறேன்.
உரிமை கோரும் வேறு யாராவது இருப்பின் காணி தொடர்பான ஆவணங்களுடன் குறிப்பிட்ட நாளில் வருகைதந்து எல்லைகளை காண்பித்து நிலஅளவைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |