கிராம சேவை அதிகாரி இல்லாமல் தவிக்கும் மஸ்கெலிய பிரதேசமக்கள்
மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா பிரவுன்லோ 320/N கிராம சேவைப் பிரிவில் நிரந்தர கிராம சேவை அதிகாரியை நியமிக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர்
நான்கு ஆண்டுகளாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர், வாரத்திற்கு ஒரு முறை தனது பிரிவில் உள்ள அலுவலகத்திற்கு வேலை செய்வதற்காக வந்து செல்வதாகவும், கிராம சேவையாளர் தனது பிரிவுக்கு கூடுதலாக பல கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பணியாற்றுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பகுதியில் நிரந்தர கிராம சேவையாளர் இல்லாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், பிரவுன்லோ 320/N கிராம சேவையாளர் பல தோட்டங்களை உள்ளடக்கியுள்ளதாகவும், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலின் போது கிராம சேவையாளர் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளைச் செய்ய முடியவில்லை என்றும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் கிராம சேவகர் சான்றிதழைக் பெறுவது கூட சாத்தியமில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
