புதுவருடத்தில் சிறிலங்கா நாடாளுமன்றில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்
புதிய வருடத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நாளில் நாடாளுமன்றத்தில் மாற்றங்கள் ஏற்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களாக பல அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்தனர்.
இறுதித் தீர்மானம்
அதேவேளை, இன்னும் பல அமைச்சர்கள் கட்சி மாறுதல் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள குழுவொன்று தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கிடையில், அரசாங்கம் கலைக்கப்படும் என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவனமும் அதில் குவிந்துள்ளது.
புதிய கூட்டணி
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு அரசியல் மாற்றங்கள் துரித கதியில் இடம்பெற்றுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 18 அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |