யாழ். அச்சுவேலியில் பாரிய தீப்பரவல்!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் கடுங்காற்று காரணமாக பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இதனால் பல ஏக்கர் புற்தரைகள் மற்றும் சிறிய உயிரினங்களின் வாழ்விடமான களப்பு பகுதி பாரியளவில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ கடுங்காற்று காரணமாக களப்பு முழுவதும் பரவி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
இது தொடர்பில் பிரதேச மக்கள் அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர்.

பின்னர் யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல்துறை அதிகாரி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் தீப்பரவலினால் எந்தவிதமான ஆபத்துக்களும் நேரவில்லை எனவும் தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |