பா.ஜ.கவை எதிர்க்க ஒன்றிணையுங்கள்! எதிர்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பா.ஜ.கதான் நம் அனைவருடைய முதல் எதிரி. நாட்டில் இடதுசாரி கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றிமாணவர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பா.ஜ.க சக்திகள்
இதன்படி மாநிலத்திற்குள் தீய சக்திகள் நுழைந்துவிட்டதாக பா.ஜ.கவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், தேர்தல் தோல்வி குறித்து பேசிய அவர், நான் யாரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |