யாழில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம் - ஆர்பாட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் (காணொளி)
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து முன்னெடுக்கும் போராட்டமானது யாழ். அரசடி பாரதியார் சிலையடி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கார்களுக்கும், சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
2.30pm
தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்காக நாட்டினுடைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் மக்களது நாளாந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் நிரந்தர தீர்வை வலியுறுத்தியும், 2 லட்சம் லஞ்சம் வேண்டாம் எமது உறவுகள் வேண்டும் என்றும் குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
