பாரிய கொள்ளை -முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் சிக்கினார்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொடுகொடவில் உள்ள வீடொன்றில் முப்பத்திரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக சீதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை ஆராய்ந்ததில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மிரிஹான தலைமையக காவல் நிலையத்தின் கீழ் கடமையாற்றிய போது பணிக்கு சமுகமளிக்காத காரணத்தினால் சேவையை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி