மத்துகம பிரதேச சபை தவிசாளர் கைது
By Dilakshan
மத்துகம பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க மத்துகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் செயலாளரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செயலாளர் நெலு நிஷாந்தி இதமல்கொட, இன்று (02) காலை கடமைக்கு வந்த போது, தவிசாளர் தனது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் கூறி, மத்துகம காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
அதன்படி, தவிசாளர் கசுன் முனசிங்க இன்று (02) மதியம் வாக்குமூலம் பதிவு செய்ய காவல்துறைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மத்துகம நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 8 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்