வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர் திருவிழா
வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் (Maviddapuram) கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் பஞ்சரதோற்சவ பெருவிழா இன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயகப்பெருமான் ,முத்துகுமாரசுவாமி ,சிவன் அம்மன் சண்முகப்பெருமான் ,சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உள்வீதி வலம் வந்து வெளியவீதி பஞ்ச இரதத்தில் எழுந்தருளினர்.
மகோற்சவ பெருவிழா
இரதோற்சவ பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் அடியவர்கள் காவடி ,கற்பூரசட்டி அங்கபிரதிஷ்டை என தமது நேர்த்தி கடன்களை எம்பெருமானுக்கு நிறைவேற்றினர்.
கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ பெருவிழா ஆடி அமாவாசை தினமான நாளை தீர்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இதேவேளை நாளை காலை சண்முகப்பெருமான் கீரிமலை புனித தீர்தக்கரையில் எழுந்தருளி தீர்தோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











